விளையாட்டு விதிமுறை மற்றும் செயல் முறை
௧ (1) : சனிக்கிழமை முதல் வியாழன் வரை ஆகிய ௬ (6) நாட்களும் தினமும் புதிர்கள் மற்றும் விளையாட்டுகள் அடங்கிய ஒரு வர்ட் (WORD File) படிமம் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
௨ (2) : பங்கேற்பாளர்கள் விளையாட்டின் படிமத்தை பதிவிறக்கம் செய்து சரியான பதிலை பதிவேற்றி கொடுக்கப்பட்டுள்ள வாட்சாப் அல்லது ஈமெயில் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
௩ (3) : சரியான பதில்கள் சமர்ப்பித்த நபர்களின் பெயர்கள் கால வரம்பு முடிந்த ௨௪(24) மணி நேரத்தில் தளத்தில் வெளியிடப்படும். ஒருவாரத்தின் அனைத்து சரியான விடைகளும் முழு தொகுப்பாக வெள்ளிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.
௪ (4) : வாரத்தின் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று அனைத்திற்கும் சரியான பதில்களை அளித்த ஒரு நபர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் அவர்க்கு செயல் முறை விதிப்படி பரிசுகள் அனுப்பப்படும்.
௫ (5) : அனைத்து விடயங்களிலும் நிறுவனர் முடிவே இறுதியானது.

No comments:
Post a Comment