விரைவு தவகல்கள்

Post Top Ad

Your Ad Spot

எம்மை பற்றி சில வரிகள்


எம்மை பற்றி சில வரிகள் .... உலகம் போற்றும் தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள் ஆன தமிழர்களில் சிலர் தமிழ் பற்றுடன் அமைத்ததே இத்தளம் காலங்கள் ஓடிக்கொண்டிருக்க நவீன உலகில் நமது திறமைகள் பட்டை தீட்டிக்கொள்ள ஒரு தளம் அமைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். நவீன உலகில் அனைத்து வயதினரும் தன் திறமைகளை மறந்து அலைப்பேசி , தொலைக்காட்சி , மேலும் பலவற்றில் தன்னிலை மறந்து அடிமை பட்டு கிடக்கின்றனர் அதில் இருந்து என் தமிழ் சமூகத்தை திறமை அறியச்செய்து மீட்டெடுப்பதே இத்தளத்தின் முதன்மை கடமை . ஒரு காலத்தில் நம் குழந்தைகள் பள்ளி முடிந்தபின்பு உடல்ரீதியான விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்களின் உடல்திறனை மேம்படுத்தினது மட்டுமில்லாமல் கலைநிகழ்ச்சிகள் கலாச்சார திருவிழாக்கள் போன்றவற்றில் பங்கேற்று தங்கள் அறிவாற்றலை மெருகூட்டினர் ஆனால் இன்றோ ? காலை எழுத்தும் அலைபேசி , பிற்பகல் முடியும் வரை அலைபேசியில் ராணுவ விளையாட்டு , மாலை வரை இதர திறன் கெடுக்கும் செயலிகள் இரவு வரை முகம் தெரியா நபர்களுடன் நட்புறவாடுவது என நவீன உலகில் நம் திறமைகளை நாமே மழுங்கடித்து கொண்டிருக்கிறோம் இந்நிலைமையை மாற்றி அமைத்திட அதே நவீன முறையில் திறன் சார் வல்லமைகளை ஊக்குவித்து வளர்த்தெடுப்பதே எமது நோக்கம் . இது ஒரு வார இணைய மலர் என்றாலும் , தமிழ் , தமிழர் வரலாறு , பெருமை , அறிவுசார் கலைகள் ஆகிய தமிழ் பண்பாடு , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவே கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும். சங்கம் வைத்து உலகத்தின் முதல் மொழி என் உயிர் தமிழை நம் முன்னோர் நமக்கு பரிசாக விட்டுச்சென்றுள்ளனர் அதை நவீன உலகிலும் நிலைநாட்ட தங்களின் ஆதரவை எதிர்பார்த்து இத்தளத்தை முன்னெடுக்கிறோம் நன்றி . தமிழே முதல் , தமிழே உயிர் , தமிழே என்றும் !

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot